Tamil Latest news,

உலக செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நேபாளத்தில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு, பலர் காயம்

undefined

காத்மண்டு,

நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கியிருந்தவர்களை தாக்கியது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
Pot Your Free Ad 100 % Free
தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள், காண்டாமிருகம் ஒன்று புகுந்து உள்ளது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். கார் ஹாரன்களை அழுத்தியும், டிரம்ஸ்களை இசைத்தும் காண்டாமிருகத்தை துரத்த முயற்சி செய்தனர். அவர்களுடையை முயற்சி அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடியது. சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்குள் நுழைந்தும், மார்க்கெட் பகுதிகளுக்குள் புகுந்தும் காண்டாமிருகம் அங்கிருந்தவர்களை விரட்டியது. இதனையடுத்து வனத்துறையினர் காண்டாமிருகத்தை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். காண்டாமிருகத்தை பிடிக்க பழக்கப்பட்ட யானைகளை கொண்டுவருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காண்டாமிருகம் மருத்துவமனையின் அருகேயே பதுங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேபாளத்தின் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கிருந்தே காண்டாமிருகம், நடந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிடாயுடா நகரை அடைந்தது உள்ளது

சிட்னி மியூசியத்தில் இருந்த சச்சின் தெண்டுல்கரின் மெழுகு சிலை அகற்றம்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடமி டுஸாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது.
  POst Your Ad 100% Freee
சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், தற்போது சச்சினின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது விளையாட்டு வீரர்கள் அணிந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியது இல்லை.இது குறித்து மும்பையை சேர்ந்த ஒரு பத்திரிகை ஒன்று  மியூசியத்தின் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து சச்சினின் மெழுகு சிலை அங்கிருந்து அகற்றபட்டது.
அந்த மெழுகு சிலை பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில்

undefined
பெய்ஜிங்,

சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்ட னையும், பர்தா அணிந்த மனைவிக்கு 2 ஆண்டு சிறையும் விதிக்கப்பட் டது.

சீனாவில் முஸ்லீம்கள் நீண்ட தாடி வளர்க்கவும், பெண்கள் முகத்தை மூடிய படி பர்தா அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
http://www.adskhan.com/
இந்த நிலையில் நீண்ட தாடி வளர்த்த ஸின்ஜியாங்க மாகாணம் உகியார் பகுதியை சேர்ந்த 38 வயது முஸ்லீம் வாலிபருக்கு காஷ்கர் கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது.


அதே போன்று முகத்தை மூடியபடி பர்தா அணிந்த அவரது மனைவிக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. இவர்கள் சட்டத்தை மீறி பிரச் சினையை தூண்டியதாக் குற்றம் சாட்டப்பட்டது.தண்டனை வழங்குவதற்கு முன்பு இத்தம்பதிக்கு பல முறை எச்சரிக்கை விடுக் கப்பட்டது. அதை மீறி இவர்கள் செயல் பட்டதால் ஜெயில் தண்டனை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளதுPost Your Ad Free

வாட்சப்பில் வாலிபர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை

undefined
மனாமா,

சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  எனவே அந்த பெண் ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது

மகனை கொன்றதால் ஆத்திரம்: 25 தீவிரவாதிகளை கொன்று குவித்த தாய்

undefined
ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சுட்டு கொன்ற தலீபான் தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்கும் விதத்தில் அவரது தாய் துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டு 25 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளார்.

தலீபான் தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்த பரா மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

சோதனை சாவடி
அதனால் எழுந்த சத்தத்தை அடுத்து ரெசா குல் என்ற பெண்மணி தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார்.  அவர் கிராம பகுதியில் அமைந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு சென்று தனது மகனை தேடியுள்ளார்.  அங்கு தனது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகி கிடப்பதை பார்த்துள்ளார்.

துப்பாக்கி சூடு
இதனால் ஆத்திரமுற்ற குல் அங்கு கிடந்த துப்பாக்கி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.  அவர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.  அவருடன் சேர்ந்து அவரது கணவர், மகள், இளைய மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

மருமகள் பேட்டி
இது குறித்து குல் உடைய மகள் பாத்திமா கூறுகையில், தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்ப போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.  அவரது மருமகள் சீமா, சண்டை நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது அது தீவிரமடைந்து இருந்தது.  எளிய மற்றும் உயர் ரக துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடந்து கொண்டு இருந்தது.  எனவே, துப்பாக்கியின் கடைசி குண்டு தீரும் வரை நாங்கள் போரிட வேண்டியிருந்தது என்று கூறியுள்ளா

ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 54 தீவிரவாதிகள் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கான் ராணுவமும், நேட்டோ படையினரும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள ஹாஸ்னி, காந்தஹார், லக்மேன், பார்யாப் மற்றும் ஷாரி புல் மாகாணங்களில் நேற்று ஆப்கான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 49 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ஹெல்மந்த் தெற்கு மாகாணப்பகுதியில் நடந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களில் 2 ராணுவ வீரர்கள் இறந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து உள்ள

கற்பழிப்பு பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

undefined

இங்கிலாந்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறுமிகள் இளம் வயதிலேயே உடலுறவில் ஈடுபடும் நிலை அதிகரித்து உள்ளது. இதனை தவிர்க்க இங்கிலாந்து அரசு புதிய யுக்தியை தொடங்கி உள்ளது. பெண் குழந்தைகளுக்கு 11 வயதில் இருந்தே கற்பழிப்புக்கும், சம்மதத்துடன் கூடிய உடல் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுத்தருகிறார்கள்.

இந்த ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த வகுப்புகளில், படுக்கையில் எப்படி படுப்பது என்பது உள்பட பாலுணர்வு, கட்டாயப்படுத்துதல், சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. கல்வித்துறை செயலாளர் நிக்கி மோர்கன் கூறும்போது, ‘‘இன்று சிறுமிகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பல அழுத்தங்களை சந்திக்கிறார்கள். நமது மகள்கள் பள்ளியை விட்டு செல்லும்போது, அவர்களுக்கு இந்த அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது நமது கடமை’’ என்றார்.

இது சைக்கிளா? அல்லது காரா?

அமெரிக்காவில் சைக்கிளையும், காரையும் ஒருங்கிணைத்து ஒரு புதுவித வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் ராப் காட்டர். இவர் முன்னாள் கார் பந்தய தொழில்நுட்ப நிபுணர். முட்டைக் கூடு போல உள்ள இந்த வாகனத்தில் ஒருவர் பயணிக்கலாம். நீங்கள் விரும்பும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்ய விரும்பினாலோ சைக்கிள் போல பெடல் செய்து ஓட்டலாம். வேகமாக செல்ல நினைத்தால் சூரியசக்தியில் இயங்கும் மோட்டாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெடல் செய்யும்போது மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்திலும், மோட்டாரை பயன்படுத்தினால் 56 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இதில் 250 கிலோ எடையை பயன்படுத்தலாம். உள்ளூர் மளிகை கடைகளுக்கு செல்ல ஏற்ற வாகனம். ஒரு பயணி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிவர இது சரியாக இருக்கும் என்கிறார் கார்ட்டர். இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் விலையுள்ள இது, 18 மாதங்களில் 450 வாகனங்கள் விற்றுவிட்டன. இதனால் பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா,

மத்திய இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி மாகாணத்தின் வடகிழக்காக 58 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்,

2008 -மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு தடுப்பு காவலில் வைத்தது செல்லாது என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அறிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த தகவல் அறிந்ததும், வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பு வகிக்கும் அனில் வத்வா, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் வாசித்தை தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து லக்வியின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தனது ஆட்சேபத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், அமெரிக்காவும் லக்வியின் விடுதலை குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு இணை செய்திதொடர்பாளர் ஜென் பாஸ்கி கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் திட்டமிட்டவர்கள் என அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றவேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருக்கான தடுப்புக்காவலை இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைக்கு அவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முக்கிய பங்காளியாக விளங்குகிறது. லக்விக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தை நிச்சயமாக நாங்கள் கவனத்தில் கொள்வோம். ஆனால், நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் முடிவு குறித்து நாங்கள் ஊகமாக எதையும் தெரிவிக்க இயலாது” என்றார்.

என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்கிறார்

லாஸ் ஏஞ்சல்ஸ், 

அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவிடம் அதிநவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன் கிடையாது. அவர் செல்போனில் யாருக்கும் குறுந்தகவல், படங்கள் அனுப்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. 

ஏ.பி.சி. டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஒபாமா, இது பற்றி குறிப்பிடும்போது, நான் பொதுவாக டிவிட் (குறுந்தகவல்) வெளியிடுவதில்லை. நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை. இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி (செல்போன்) மட்டுமே உள்ளது என்றார்.

ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடன், நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்பு காரணங்களையட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட போன்களை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ஹில்லாரி கிளிண்டன் அரசு பணிகளில் தனது சொந்த இமெயில் முகவரியை பயன்படுத்தினார் என்று எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ஹில்லாரி கிளிண்டனின் இமெயில் முகவரி உங்களிடம் உண்டா? என ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. நீங்கள் அதை பெறுவதை அவர் விரும்ப மாட்டார். வெளிப்படையாக இதை சொல்கிறேன் என பதில் அளித்தார்.

இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது பாகிஸ்தான்: லக்வியின் காவல் மேலும் ஒருமாதத்துக்கு நீட்டிப்பு


இஸ்லமாபாத்,

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு தடுப்பு காவலில் வைத்தது செல்லாது என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அறிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில், பஞ்பாப் மாகாண அரசு புதிய தடுப்புக்காவல் உத்தரவை லக்விக்கு எதிராக பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மேலும் ஒருமாத காலத்துக்கு லக்வி  சிறையில் இருந்து வெளிவரமுடியாது என்று கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று, லக்விக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதையடுத்து  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் வாசித்தை தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து லக்வியின் விடுதலைக்கு  இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன், தனது ஆட்சேபத்தை பதிவு செய்தது.அது மட்டுமின்றி இந்த விவகாரத்தை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பாகிஸ்தான் அரசிடம் தீவிரமாக எடுத்துச் சென்றுள்ளது. லக்வி விவகாரத்தால் அமெரிக்காவும் பாகிஸ்தானை கண்டித்து இருந்தது குறிப்பித்தக்கது

மியான்மரில் படகு கவிழ்ந்து 50 பேர் பலி


undefined
யாங்கூன்,

மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்றுமுன்தினம் படகு ஒன்று சென்றது. இதில் 209 பயணிகள் பயணம் செய்தனர். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்த படகு, மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக திடீரென கவிழ்ந்தது.

மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய 167 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரை காணவில்லை. இந்த விபத்தில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அளவுக்கு அதிக அளவில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம். மியான்மரில் படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய, பழமையான மற்றும் கூட்டநெரிசல் மிகுந்த கப்பல்களில் பயணம் செய்வதே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது

இயந்திர துப்பாக்கி வெடிகுண்டுகளை தாங்கிய குழந்தை படங்கள் தீவிரவாதிகள் வெளியிட்டனர்


ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து வைத்து உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அவற்றை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதி ஆர்வலர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர்.இதனால் பல நாடுகள் அதற்கு தடைவிதித்து உள்ளன. சிறுவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி அளித்து வருவதாக ஏற்கனவே ஐ.நா குற்றம் சாட்டி வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள், பிணைக்கைதிகளை பிடித்து தலையைத் துண்டித்து படுகொலை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த தங்கள் பிரசார உத்திகளாக பயன்படுத்தி வருய்கின்றனர். சமீத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் இஸ்ரேலை சேர்ந்த அரேபிய பிணைக்கைதி ஒருவரை மதத்துடன் தொடர்புடைய இரண்டு வார்த்தைகளை கூறி விட்டு, நெற்றிக்கு நேராக சுடுகிறான். இதில் அவர் சரிந்து விழுந்தபோது, மீண்டும் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறான். இதில் அவர் உயிரிழக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

ராணுவ வீரர்களை கொலைசெய்து தலைகீழாக தொங்கவிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்


undefined
ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. தங்களிடம் பிணைய கைதியாக சிக்குபவர்கள் மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் கொலை செய்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோவை வெளியிட்டு உலகையே அதிர்ச்சியில் உரையசெய்துள்ளனர். தலையை வெட்டி கொலை செய்வது, பெட்ரோல் ஊற்றி எரிப்பது என பல்வேறு அட்டூழியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களிடம் சிக்கும் ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது, என்று புகைப்படங்களுடன் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள கிர்குக் மாகாணம், ஹாவிஜா நகரில் பெரும் கொடூரம் அரங்கேறியுள்ளது. தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய ராணுவ வீரர்களை கொலை செய்து, நகரின் நுழைவு வாயிலில் அவர்களை தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர். புகைப்படத்தில் பெண்களும், ஆண்களும் இச்சம்பவத்தை பார்க்கும் படுபாவும் இடம்பெற்றுள்ளது.

ராணுவ வீரர்கள் கூண்டுக்கள் அடைக்கப்பட்ட நிலையில் நகர் முழுவதும், ஆரஞ்சு நிற உடையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலாமாக கொண்டு செல்லப்படும் ராணுவ வீரர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக தாக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது

திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டியது, ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்




திக்ரித்தில் ராணுவம்- தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

ஈராக்கில் தீவிரவாதிகளின்வசம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீழ்ந்து விட்ட, முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை மீட்கும் முழு முயற்சியில் ராணுவம் இறங்கி உள்ளது. இருதரப்பு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈராக் ராணுவ வீரர்களும், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு போராளிகளும், உள்ளூர் சன்னி பிரிவு பழங்குடியினத்தவரின் ஆதரவுடன் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கடும் முயற்சிக்கு பின்னர் திக்ரித் நகருக்குள் அவர்கள் நுழைந்து விட்டனர்.

அதன் வடபகுதியில் உள்ள காதிசியா மாவட்டத்தை ராணுவம் வசப்படுத்தியது. திக்ரித் பொது மருத்துவமனைக்குள்ளும் ராணுவம் நுழைந்தது. இதற்கு பதிலடி தருகிற வகையில் அந்த இயக்கத்தினர் அன்பார் மாகாணத்தில் ரமடி நகரில் ராணுவம், ராணுவ நிலைகள் மீது 13 கார் குண்டுவெடிப்புகளை நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினர். திக்ரித் நகரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் முன்னேறி, பல்வேறு பகுதிகளில் முன்னேறி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டிஉள்ளது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவு ஆகும்.

முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ ஆதரம் உள்ளது என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஈராக் ராணுவப் படைகளை குறிவைத்து கெமிக்கல் அடங்கிய குண்டுகள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்று ஈராக் அரசும் தெரிவித்து உள்ளது. சாலை ஓரங்களில் வெடிக்க செய்யப்படும் குண்டுகளில் குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.

முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சுவளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கும். குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குவது. சுவாசத்தின்போது காற்றில் குளோரின் அளவு 1000 பிபிஎம் (மில்லியனில் ஒரு பகுதி) ஆக இருந்தால் இறக்க நேரிடும். காற்றில் அனுமதிக்கப்பட்ட இதன்அளவு 1 பிபிஎம் ஆகும்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக ஆஸ்திரேலிய வாலிபர், தற்கொலை படை தாக்குதல் நடத்தி, பலி ஆனார்


undefined சிட்னி ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் ஆஸ்திரேலிய வாலிபர் ஒருவர் பலி ஆனார். ஆஸ்திரேலிய வாலிபர் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களும் சேர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 18 வயது வாலிபர் ஜேக் பிலார்டியும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மெல்போர்ன் நகரில் இருந்து புறப்பட்டு, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகர் வழியாக ஈராக்கிற்கு சென்றார். அங்கு அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வந்தார். தற்கொலை படை தாக்குதலில் பலி அவர் ஈராக் செல்வதற்கு முன் தனது வீட்டில் ஏராளமான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும் விட்டுச்சென்றது தெரிய வந்தது. அதைக் கண்ட அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, உஷார்படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஜேக் பிலார்டி தனது பெயரை அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்று மாற்றிக்கொண்டு, அன்பார் மாகாணத்தில் உள்ள ரமடி நகரில் வெடிகுண்டுகள் நிரப்பிய வேனில் சென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் உடல் சிதறி பலியாகி விட்டார். இது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஜேக், ஒரு வெள்ளை நிற வேனில், அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்ற பெயரும், கடவுள் இவரை ஏற்றுக்கொள்வாராக என்ற வாசகங்களும் எழுதப்பட்டு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜேக் கொல்லப்பட்டு விட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்க தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. வலைத்தளம் எழுதியவர் இது தொடர்பாக அந்த இயக்கத்துடன் தொடர்புடைய ‘டுவிட்டர்’ பக்கங்களில், ‘‘உஸ்பெகிஸ்தான், ரஷியா, சிரியா, எகிப்து, பெல்ஜியம், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த போராளிகளுடன் இணைந்து ரமடியில் நடத்திய தொடர் கார் குண்டு தாக்குதல்களில் பிலார்டி பலியாகி விட்டார் என கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஜேக் பிலார்டி, ‘மெல்போர்ன் நகரில் இருந்து ரமடி (ஈராக் நகரம்) வரையில் எனது பயணம்’ என்ற தலைப்பில் வலைத்தளத்தில் எழுதி வந்திருப்பதும், இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதில் அவர் ஆஸ்திரேலியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறி இருந்தது தெரிய வந்திருக்கிறது. இப்போது அந்த வலைத்தள பக்கங்கள் நீக்கப்பட்டு விட்டன. டோனி அப்போட் கருத்து மேலும் ஜேக் பிலார்டி கடந்த டிசம்பர் மாதம் பி.பி.சி.க்கு பேட்டி அளித்ததாகவும், அதில் அவர் ‘நான் மரணத்தை துரத்திக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் ஆகி உள்ளேன்’ என குறிப்பிட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஜேக் பிலார்டி தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியாகி இருப்பது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘‘ உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த தகவல்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு மற்றொரு உதாரணம் ஆகும். இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இப்படிப்பட்ட கொடூரமான சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்கள் கவர்ந்து இழுப்பதிலிருந்து, நாம் நமது வாலிபர்களை முடிந்த அளவு காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்’’ என கூறினார்

நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 34 பேர் பலி

பவுச்சி நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் வடகிழக்கு நைஜீரிய நகரமான மைடுகுரியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு சந்தையில் நேற்றுமுன்தினம் இளம் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இந்த தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மைடுகுரி சந்தையில் கடந்த சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதலில் 54 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது
+