என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்கிறார்

லாஸ் ஏஞ்சல்ஸ், 

அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவிடம் அதிநவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போன் கிடையாது. அவர் செல்போனில் யாருக்கும் குறுந்தகவல், படங்கள் அனுப்புவது இல்லை என தெரிய வந்துள்ளது. 

ஏ.பி.சி. டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஒபாமா, இது பற்றி குறிப்பிடும்போது, நான் பொதுவாக டிவிட் (குறுந்தகவல்) வெளியிடுவதில்லை. நான் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை. இப்போதும் என்னிடம் ஒரு பிளாக்பெர்ரி (செல்போன்) மட்டுமே உள்ளது என்றார்.

ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடன், நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்பு காரணங்களையட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதி கொண்ட போன்களை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ஹில்லாரி கிளிண்டன் அரசு பணிகளில் தனது சொந்த இமெயில் முகவரியை பயன்படுத்தினார் என்று எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ஹில்லாரி கிளிண்டனின் இமெயில் முகவரி உங்களிடம் உண்டா? என ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. நீங்கள் அதை பெறுவதை அவர் விரும்ப மாட்டார். வெளிப்படையாக இதை சொல்கிறேன் என பதில் அளித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

+