வேலை பறிபோன கோபத்தில் குழந்தையின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிய பணிப்பெண்

ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு வீட்டில் கடந்த 4 வருடங்களாக இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு பெண் வேலை செய்து வந்தார். அந்த குடும்பத்தில் உள்ள 3 வயது குழந்தையை பராமறித்து வந்தார். அவருடைய 4 வருட விசா முடிவடைந்தது. விசாவை நீட்டித்து தருமாறு அந்த பெண் தெரிவித்து இருந்தார். ஆனால் விசா நீட்டித்து தரப்பட வில்லை.

இந்த நிலையில் 3 வயது சிறுவன் உமர் யூசுப் அலி வாபி  வீட்டு வெளியே விளையாடி கொண்டு இருந்தான் அப்போது பணிப்பேண் சிறுவனை முகத்தை சுத்த செய்வதாக கூறி கழிவறைக்குள் கொண்டு சென்று அங்கு இருந்த  கழிவறை ஆசிட்டை குழந்தையின் முகத்தில் ஊற்றினார். இதில் குழந்தையின் முகம் மற்றும் உடலின் பல பாகங்களிலும் ஆசிட் விழுந்து காயமானது.உடனடியாக குழந்தையை  ஷார்ஜாவில் உள்ள அல் குவசிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உமரின் தத்து தாயார் அமினா கூறிய தகவலின் படி  உள்ளூர்  பத்திரிகையில் செய்தி பிரசுரமாகி உள்ளது.  இந்த சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது. ஆசிட் பட்டதும் குழந்தையின்  முகத்தில் இருந்து கரும் புகை வந்து உள்ளது.வீட்டில் உள்ளவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பணிப்பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் சிறுவன் தானே ஆசிட்டை எடுத்து முகத்தில் ஊற்று கொண்டதாக  முதலில் பணிப்பெண் கூறி உள்ளார். பின்னர் தனது குற்றத்தை ஒப்பு கொண்டார்.

குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது.சேதம் அதிகமாக உள்ளது பிளாஷ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை  டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக

+