அஜித்தின் மங்காத்தா ரீ மேக்கில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் இடையே போட்டா போட்டி


undefined அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படம் இந்தியில் எடுக்க தீவிர முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் இப்படத்தை பாலிவுட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் ‘மங்காத்தா பாலிவுட் ரீமேக் சாத்தியம் என்றால் அஜித் இப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை ஏற்பார்’ என்று ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அசோகா இந்தி படத்தில் நடிகர் அஜித் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஷாருக்கான், ஜூஹி சாவ்லா,உள்பட பலர் நடித்திருந்தனர்.பின்னர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகி விட்டதால் பாலிவுட் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. மங்காத்தா இந்தி படத்தில் அஜித் நடிப்பதாக கூறப்பட்ட்து ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவுல் இல்லை. ஆனால் மங்காத்தா இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கதாநாயகர்களிடையே மிகுந்த போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடிக்க சல்மான் கான் – அக்‌ஷய் குமார் இடையே மிகுந்த போட்டி உள்ளது. மங்காத்தா இந்தி ரீ மேக்கை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கபோவது இல்லை. அவர் பல் வேறு புராஜக்ட்களில் பிஸியாக இருப்பதால் அவர் இயக்கபோவது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக

+