திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டியது, ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள்




திக்ரித்தில் ராணுவம்- தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

ஈராக்கில் தீவிரவாதிகளின்வசம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீழ்ந்து விட்ட, முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை மீட்கும் முழு முயற்சியில் ராணுவம் இறங்கி உள்ளது. இருதரப்பு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈராக் ராணுவ வீரர்களும், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு போராளிகளும், உள்ளூர் சன்னி பிரிவு பழங்குடியினத்தவரின் ஆதரவுடன் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கடும் முயற்சிக்கு பின்னர் திக்ரித் நகருக்குள் அவர்கள் நுழைந்து விட்டனர்.

அதன் வடபகுதியில் உள்ள காதிசியா மாவட்டத்தை ராணுவம் வசப்படுத்தியது. திக்ரித் பொது மருத்துவமனைக்குள்ளும் ராணுவம் நுழைந்தது. இதற்கு பதிலடி தருகிற வகையில் அந்த இயக்கத்தினர் அன்பார் மாகாணத்தில் ரமடி நகரில் ராணுவம், ராணுவ நிலைகள் மீது 13 கார் குண்டுவெடிப்புகளை நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினர். திக்ரித் நகரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் முன்னேறி, பல்வேறு பகுதிகளில் முன்னேறி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே திக்ரித்தில் போர் உச்சக்கட்டத்தை எட்டிஉள்ளது. இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவு ஆகும்.

முன்னேறிவரும் ராணுவத்திற்கு தீவிரவாதிகள் எதிராக குளோரின் வாய்வை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ ஆதரம் உள்ளது என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஈராக் ராணுவப் படைகளை குறிவைத்து கெமிக்கல் அடங்கிய குண்டுகள் வெடிக்கச் செய்யப்படுகிறது என்று ஈராக் அரசும் தெரிவித்து உள்ளது. சாலை ஓரங்களில் வெடிக்க செய்யப்படும் குண்டுகளில் குளோரின் வாயு பயன்படுத்தப்படுகிறது.

முதல் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சுவளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கும். குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குவது. சுவாசத்தின்போது காற்றில் குளோரின் அளவு 1000 பிபிஎம் (மில்லியனில் ஒரு பகுதி) ஆக இருந்தால் இறக்க நேரிடும். காற்றில் அனுமதிக்கப்பட்ட இதன்அளவு 1 பிபிஎம் ஆகும்

0 comments:

கருத்துரையிடுக

+