மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்,

2008 -மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு தடுப்பு காவலில் வைத்தது செல்லாது என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அறிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த தகவல் அறிந்ததும், வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பு வகிக்கும் அனில் வத்வா, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் வாசித்தை தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து லக்வியின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தனது ஆட்சேபத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில், அமெரிக்காவும் லக்வியின் விடுதலை குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு இணை செய்திதொடர்பாளர் ஜென் பாஸ்கி கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் திட்டமிட்டவர்கள் என அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றவேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருக்கான தடுப்புக்காவலை இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைக்கு அவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முக்கிய பங்காளியாக விளங்குகிறது. லக்விக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தை நிச்சயமாக நாங்கள் கவனத்தில் கொள்வோம். ஆனால், நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் முடிவு குறித்து நாங்கள் ஊகமாக எதையும் தெரிவிக்க இயலாது” என்றார்.

0 comments:

கருத்துரையிடுக

+