Tamil Latest news,

ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரோக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர், உயர் வருமானம் பெறுகின்றனர் ஆய்வில் கண்டுபிடிப்பு

undefined
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளனர் என்றும், உயர் வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ‘ஐகியூ’ அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள் அதிகமான அளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்றும்  ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதியஆய்வானது சுமார் 3,500 பிறந்த குழந்தைகளிடம், 30 வருடம் நடத்தப்பட்டதில், ஒருவருடம் தாய்ப்பால் குடித்து  வளரும் குழந்தையானது, நீண்டகாலம் பலன்களை பெறுகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு குழுவில் இடம்பெற்று இருந்த பிரேசில் நாட்டு  பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் பெர்னார்டோ லெஸ்சா ஹோர்டா பேசுகையில்,

‘நீண்டநாட்கள் தாய்ப்பால் கொடுப்பது, 30 வருடங்கள் வரையில் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் உயரசெய்யாது, தனிப்பட்ட மற்றும் சமூகத்தின்  தரப்பிலும் பிரதிபலிக்கும். எப்படியென்றால் கல்வியில் சிறந்து விளங்குதல், வருமானம் அதிகம் பெறுவதிலும் முன்னேற்றம் காரணமாக.’ என்று குறிப்பிட்டு  உள்ளார். டாக்டர் ஹோர்டாவின் ஆய்வு குழு, 1982-ம் ஆண்டு பிரேசில் மற்றும் பெலோடாஸில் பிறந்த குழந்தைகள் சுமார் 6,000 பேரது தகவல்களை பெற்றது.

குழந்தை பருவத்தில் இருந்து அவர்களது டேட்டாக்கள் அனைத்தையும் ஆய்வு குழு பெற்று உள்ளது.  ஆய்வில் இடம்பெற்றவர்கள் அனைவரும், 30 வயது வயதில் ‘ஐ.கியூ.’ டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் இடம்பெற்றவர்களில் பாதிபேரது கல்வி  முன்னேற்றம் மற்றும் வருமானம் குறித்தான தகவல்களும் பெறப்பட்டது. ஆய்வில் அவர்களுடைய புத்திசாலித்தனம் உயர்ந்தது கணப்பட்டது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடித்தவர்கள் கல்விஅறிவு மற்றும் வளர்ந்ததும் பெறும் வருமானம் மற்றும் எல்லா காலங்களிலும் புத்திசாலித்தனம் உள்ளவர்களாக உள்ளனர் என்று    தி லான்சட் உலகளாவிய சுகாதாரம் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. நீண்ட காலம் தாய்ப்பால் குடித்தவர்கள் என்பது 12 மாத காலம் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் ஆகும்.

முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டுவர்கள் என்பதை குறிப்பிட்டது. வயிற்றுக் கோளாறு, ஆஸ்துமா ஆகியவற்றில் இருந்து தாய்ப்பால் காக்கிறது என்றும், வாழ்க்கையில் சுகாதார பலன்களை அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த ஆய்வு பிரிட்டனில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்று அமலுக்கு வந்தது. இங்கிலாந்து அரசு நிறுவனம் சமீபத்தில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு அதிரடி திட்டத்தை தொடங்கியது. 6 வாரங்களுக்கு மேல் கொடுத்தால் ரூ.12,000 வரை கிப்ட் வவுச்சரும், 6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சரும் கொடுப்பதாக அறிவித்தது குறிபிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. நான்கில், ஒரு பெண் மட்டுமே இங்கிலாந்து நாட்டில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார் என்றும், நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது என்ற எண்ணிக்கை உலகளவில் இங்கிலாந்தில்தான் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாமான நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது அவர்களது புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம்

undefined
மெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக ஐந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

முந்திரிப்பருப்பின் நன்மைகள்

undefined
முந்திரிப்பருப்பு சுவையானது மட்டுமல்ல, நமக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தரவல்லது.

இப்பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயை வராமல் தடுக்க உதவும்  'பைட்டோகெமிக்கல்ஸ்'எனப்படும் தாவர வேதிப்பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

முந்திரிப் பருப்பில் இதயத்துக்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான  (mono unsaturated fatty acids) ஒலியிக் மற்றும்  பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.

இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய கொலஸ்ட்ராலை குறைத்து, நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும், ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயைத் தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றைத் தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

முந்திரிப் பருப்பில் உள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி, உயிரணு உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது

அழகுடன் ஆரோக்கியம் காக்க


undefined
கட்டழகுடன் ஆரோக்கியமாகத் திகழ ஆண்கள் அனைவரும் விரும்புவார்கள்தானே?

அதற்காக உடற்பயிற்சிக்கூடம் சென்று உடற்பயிற்சி செய்வார்கள், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் பலருக்கும், அனைத்துச் சத்துகளையும் பெற என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை.
அவர்களுக்கு உதவும் விதமாக அந்த உணவுகளின் விவரம் இதோ...
பால், முட்டை: பாலில் புரதம், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் பாலை அருந்தினால் தசைகளின் வளர்ச்சி, எலும்புகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முட்டையிலும் புரதம் நிறைந்துள்ளதால், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி: இறைச்சியில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கிரியாட்டின் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து வலிமையை அதிகரிக்கவும், கிரியாட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. எனவே உடற்பயிற்சிக் கூடம் செல்லும் நபர்களுக்கு இறைச்சி சிறந்த உணவாக இருக்கும்.

மீன்: மீனில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இதை வாரத்துக்கு இருமுறையாவது சாப்பிடுவது நல்லது. முக்கியமாக, மீனில் கொழுப்புகள் குறைவாக இருக்கின்றன.

வேர்க்கடலை வெண்ணெய்: இதில் புரதங்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன. இது உடல் கட்டமைப்பில் பெரிதும் உதவியாக இருப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக்கவும் செய்கிறது.

ஓட்ஸ்: உடற்பயிற்சிக்கூடம் சென்று வந்தவுடன், பால் சேர்ந்த ஓட்ஸ் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவியாக இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சர்க்கரைகள், உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும். மேலும் வாழைப்பழத்தில் கொழுப்புகள் ஏதும் இல்லாததால், இதை உட்கொள்வது நல்லது.

பாதாம்: பாதாமில் உள்ள புரதங்களும், நார்ச்சத்துகளும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன. மேலும் செரிமானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது
+