மூக்கில் சதை வளர்ச்சி நடிகர் அஜித்குமாருக்கு ’ஆபரேஷன்’
சென்னை,
அஜித்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். ஒரு பந்தயத்தில் அவர் கலந்து கொண்டபோது, முதுகில் அடிபட்டது. இதற்காக அவருடைய முதுகில், ’ஆபரேஷன்’ நடந்தது. ஆபரேஷனுக்குப்பின் அஜித்குமார் முழுமையாக குணம் அடைந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த வருடம் அவர் ஐதராபாத்தில் நடந்த ’ஆரம்பம்’ படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, காலில் பலத்த அடிபட்டது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டபின், தொடர்ந்து அவர் நடித்து வந்தார்.’
’’அடிபட்ட காலில் ’ஆபரேஷன்’செய்து கொண்டால் பிற்காலத்தில் பாதிப்பு இருக்காது. ஆனால், ஆபரேஷனுக்குப்பின் மூன்று மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும்’’ என்று டாக்டர்கள் கூறினார்கள். அத்தனை நாட்கள் ஓய்வு எடுக்க முடியாது என்பதால், காலில் ’ஆபரேஷன்’ செய்து கொள்வதை அஜித்குமார் தள்ளிப்போட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அவருடைய மூக்கின் உள்பக்கம் அதிக சதை வளர்ச்சி காரணமாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதற்காக, அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று காலை 5-30 மணிக்கு ’ஆபரேஷன்’ நடந்தது.
மூக்கின் உள்ளே வளர்ந்திருந்த சதை, ’ஆபரேஷன்’மூலம் நீக்கப்பட்டது. அஜித்குமாருக்கு பிரபல காது-மூக்கு-தொண்டை நிபுணர் டாக்டர் கே.ராஜசேகர், ’ஆபரேஷன்’ செய்தார். ஆபரேஷனுக்குப்பின், அஜித் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வீட்டில் சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி, அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகள் ஐஸ்வர்யா தயாரிக்கிறா