Tamil Latest news,

பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக்கொலை வாலிபர் கைது

undefined
கோவை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

கோவையை அடுத்த சூலூர் திருச்சி ரோடு மதியழகன்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ரூபா (வயது 17). இவர் காங்கயத்தில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்திருந்தார்.

இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் கண்ணன். இவருடைய மகன் சுரேஷ் (23). பெயிண்டர். இவர் ரூபாவிடம் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு ரூபா, தன்னை பின்தொடர்ந்து வரவோ, பேசி தொந்தரவு கொடுக்கவோ வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

குத்திக்கொலை

சம்பவத்தன்று சுரேஷ், ரூபாவை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய் துள்ளார். அதை ரூபா ஏற்க மறுத்ததால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி ரூபாவின் கழுத்தில் குத்தி உள்ளார். இதனால் வலியால் துடித்த ரூபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ரூபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேசை தேடி வந்தனர். அப்போது சூலூர் குப்பைக் கிடங்கு அருகே மறைந்திருந்த சுரேசை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தன

விடுதியில் தங்கி படித்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: ஒடிசாவில் 3வது சம்பவம்

மால்கன்கிரி,

ஒடிசாவில் விடுதி ஒன்றில் தங்கி படித்து வரும் 9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோராபுட் மாவட்டத்தில் 3 சிறுமிகளும் மற்றும் கந்தமால் மாவட்டத்தில் ஒரு சிறுமியும் என கடந்த 2 மாதங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரிகள் இந்த தகவலை கூறியுள்ளனர்.

பணி இடை நீக்கம்
கச்சேலி கிராமத்தை சேர்ந்த 9வது படிக்கும் அந்த மாணவி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின முன்னேற்ற துறை விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.  விடுதி நிர்வாகத்திற்கு இது குறித்து தெரிந்தவுடன் அதன் காப்பாளர் சபீதாராணி சர்கார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கைது
இது தொடர்பாக விடுதி நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது.  போலீசாரும் சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார் என விசாரணையை தொடங்கியுள்ளனர்.  அதில், மாணவி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு செல்லும்போது அங்கு ஒரு பையனுடன் தொடர்பு ஏற்பட்டிருக்க கூடும் என நம்பப்படுகிறது.  எனவே, போலீசார் அவனை கைது செய்து உள்ளனர்.

விசாரணை தொடருகிறது.  முறையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளி மீது புகார் பதிவு செய்யப்பட்டு மாணவிக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மால்கன்கிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்கிஷோர் தாஷ் கூறியுள்ளார்

மார்பிங்’ செய்து நடிகைகளின் படங்களை வெளியிடுவது “கற்பழிப்பை விட கொடுமையானது” நடிகை ஹன்சிகா பேட்டி

சென்னை,

‘‘மார்பிங் செய்து நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, கற்பழிப்பை விட கொடுமையானது’’ என்று நடிகை ஹன்சிகா கூறினார்.

பேட்டி

வருகிற 8-ந் தேதி, ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப் படுவதையொட்டி, ‘தினத்தந்தி’ நிருபருக்கு நடிகை ஹன்சிகா பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஹன்சிகா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெண்ணாக பிறந்ததற்காக பெருமைப்படுகிறீர்களா, வருத்தப்படுகிறீர்களா?

பதில்:- மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் தான் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். சமுதாயத்தை மாற்றி அமைப்பதில் உறுதியாக நிற்பவர்கள், பெண்கள் தான். பெண்களால் தான் ஒரு உயிரை கொண்டு வர முடியும். அதற்காக, ஒட்டுமொத்த பெண்களும் பெருமைப்படலாம். பெண்ணாக பிறந்ததற்காக வருத்தப்பட எதுவும் இல்லை.

துணிச்சல்

கேள்வி:- ஹன்சிகா துணிச்சல் மிகுந்த பெண்ணா, பயந்த சுபாவமா?

பதில்:- நான், பயந்த சுபாவம் அல்ல. துணிச்சலாக இருக்க வேண்டிய விஷயங்களில் துணிச்சலாகவும், பொறுமையாக இருக்க வேண்டிய விஷயங்களில் பொறுமையாகவும் இருக்கிறேன்.

கேள்வி:- யாரைப் பார்த்து பயப்படுவீர்கள்?

பதில்:- முதுகில் குத்துபவர்களுக்கு பயப்படுவேன். பல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கும் பயப்படுவேன்.

பிடித்த பெண்

கேள்வி:- உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் யார்?

பதில்:- எங்க அம்மா தான். நான், ஒரு பிரபல நடிகையாக இருப்பதற்கு அம்மா தான் காரணம். எங்க அண்ணன் பிரசாந்த் மும்பையில் உள்ள ஒரு மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பதற்கும் அம்மா தான் காரணம். எங்கள் இரண்டு பேரையும் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்தவர், அம்மாதான். இன்று நாங்கள் ஒரு அந்தஸ்தில் இருப்பதற்கும் அம்மாவே காரணம்.

கேள்வி:- பெண்கள் சமுதாயத்துக்கு நீங்கள் செய்ய நினைப்பது என்ன?

பதில்:- பெண்களுக்கு மரியாதை கிடைக்கிற மாதிரி நடந்து கொள்வதே பெண்கள் சமுதாயத்துக்கு செய்யும் சேவைதான். ஒரு பெண் வீட்டை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், சமுதாயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சமுதாயத்துக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிறேன். அது, பெண்களால் மட்டுமே முடியும்.

ஆண்களிடம் பிடித்தது...

கேள்வி:- ஆண்களிடம் உங்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன?

பதில்:- பெண்களை மதிக்கும் ஆண்களை பிடிக்கும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர்களை பிடிக்கும். பெண்களை அடிமைகளாக நடத்தும் ஆண்களை பிடிக்காது. ஆண்களின் தன்னம்பிக்கை பிடிக்கும். நம்மால் தான் முடியும் என்ற ஆண்களின் கர்வம் பிடிக்காது.

கேள்வி:- ஒரு பிரபல நடிகையாக இருப்பதில் உள்ள சாதகம்-பாதகம் என்ன?

பதில்:- வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இல்லாத பெயரும், புகழும் நடிகைகளுக்கு கிடைப்பதை சாதகமாக கருதுகிறேன். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சில சமயங்களில் பாதிக்கப்படுவதை பாதகமாக கருதுகிறேன். ஒரு பிரபலம் என்பதால், அதை சகித்துக்கொண்டுதான் போக வேண்டும்.

சின்ன குஷ்பு

கேள்வி:- உங்களை, ‘சின்ன குஷ்பு’ என்று சொல்கிறார்கள். குஷ்புவை போல் நீங்களும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- எனக்கு அரசியல் வேண்டாம். சினிமா மட்டுமே போதும். அரசியல் எனக்கு புரியாது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ‘ஜிம்.’ அதன்பிறகு சந்தோஷமாக தூங்குகிறேன். இந்த வாழ்க்கை போதும். அரசியலுக்கு வந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மும்பை அருகில் உள்ள வாடாவில் ஆதரவற்றோருக்கும், முதியோருக்கும் இல்லம் கட்டி வருகிறேன். சினிமாவில் நடித்து கிடைக்கும் சம்பளத்தில் ஆதரவற்றோரையும், முதியோரையும் கவனித்துக் கொள்வது, நிம்மதி அளிக்கிறது.

தண்டனை

கேள்வி:- ‘மார்பிங்’ செய்து நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

பதில்:- மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களை சந்தோஷமாக வைத்து இருக்கிறோம். எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.

புகார்?

கேள்வி:- இந்த பிரச்சினையில் சிக்கிய நீங்கள் ஏன் காவல் துறையிலும், நடிகர் சங்கத்திலும் புகார் செய்யவில்லை?

பதில்:- அந்த படத்தில் இருப்பது நான் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்

காதலியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி: காதலியின் பெற்றோரை தாக்கிய காதலன் உட்பட 2 பேர் கைது

சாம்ராஜ்நகர் அருகே காதலியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற கணவன்- மனைவி மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதலுக்கு எதிர்ப்பு

சாம்ராஜ்நகர் தாலுகா கெல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் விஜய், அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த விஜய் கடும் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜய் தனது நண்பர் ரமேஷ் உள்பட 3 பேருடன் தனது காதலியின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கணவன்- மனைவி மீது தாக்குதல்

அப்போது வீட்டில் இருந்த இளம்பெண்ணின் தாய், தந்தையிடம், உங்களது மகளை நான் காதலிக்கிறேன். நீங்கள் வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்தால், நடப்பதே வேறு என்று விஜய் கூறியுள்ளார். இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் விஜய் உள்பட 4 பேரும், அவர்களுடன் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் 4 பேரும் சேர்ந்து பெண்ணின் பெற்றோரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர்கள் கூச்சல்போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். இதை அறிந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் சாம்ராஜ்நகர் புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய விஜய், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


கொல்கத்தா/டெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளர். சிறுமியை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. இந்நிலையில் அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காலை கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் 22 வயது இளம்பெண் ஓடும் காரில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மதுரவை சேர்ந்த இளம் பெண் குர்கானில் இருந்து திரும்பிய போது அவரை கடத்தி சென்று மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மர்ம கும்பல் பெண்ணிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் 35 வயது பெண் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மும்பை மாடல் ஒருவர் அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பராச் மாவட்டத்தில் கடந்த 2007ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி விக்கிக்கு மாவட்ட கோர்ட்டு 10 வருடம் ஜெயில் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாமிலியில் தந்தை மற்றும் தங்கையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தன

2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மரணம்


கொல்கத்தாவில் 2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி, பெண் ஒருவர் ஓடும் காரில் கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவுபெண் பப்பில் இருந்து வெளியே வந்தபோது, 6 வாலிபர்களால் காரில் அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்தி வெளியுலகிற்கு தெரியவந்தவர். பல்வேறு போராட்டங்கள் நடத்திய பெண் இன்று காலை உயிரிழந்தார். உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சிலநாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்ணின் உடல்நலம் பாதிப்பு தொடர்பான முழுவிபரங்கள் வெளியாகவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து காதலியை தாக்கி விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை குடிபண்டே அருகே பரபரப்பு


கோலார் தங்கவயல், தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காதலியை வீடு புகுந்து தாக்கி விட்டு, அங்கேயே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடிபண்டே அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தனியார் நிறுவன ஊழியர் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா மோடமாக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 26). பட்டதாரி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கவிதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிதாவிற்கு அவரது பெற்றோர் இன்னொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவிதா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் ராமகிருஷ்ணா பேச முயன்றார். ஆனால் ராமகிருஷ்ணாவிடம், கவிதா பேச மறுத்ததோடு, தனது செருப்பால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கவிதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரை தொடர்ந்து போலீசார், ராமகிருஷ்ணாவை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். தற்கொலை இந்த நிலையில், நேற்று முன்தினம் கவிதா மீண்டும் மோடமாக்கனஹள்ளி கிராமத்திற்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, ராமகிருஷ்ணா அங்கு சென்று கவிதாவிடம் பேச முயன்றார். ஆனால் கவிதா, ராமகிருஷ்ணாவிடம் பேசாமல் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கவிதாவின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் கவிதா இறந்ததாக கருதி அவரது வீட்டிலேயே ராமகிருஷ்ணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், கவிதாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கவிதாவை மீட்டு குடிபண்டே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணை இதுபற்றிய தகவல் அறிந்ததும், குடிபண்டே டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ராமகிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடிபண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குடிபண்டே டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னை காதலித்த விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த காதலியை தாக்கி விட்டு அவரது வீட்டிலேயே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோடமாக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது

கோழிகோடு, கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து உள்ளார். கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஷமீர்(வயது 29) தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதனை பேஸ்புக்கில் பார்த்த அவருடைய முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சுற்றிவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவுசெய்து வாலிபரை கைது செய்தனர்

கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு

நாள்:ஞாயிறு, மார்ச் 08,2015, 4:00 AM ISTபதிவு செய்த நாள்:சனி, மார்ச் 07,2015, 8:32 PM IST ஈரோடு, பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மாணவி பலாத்காரம் ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 29). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் கடந்த 11–8–2013 அன்று அந்த பகுதியில் 9–ம் வகுப்பு படித்துவந்த பள்ளிக்கூட மாணவி ஒருவரை ஏமாற்றி ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 21 ஆண்டு ஜெயில் வழக்கை நீதிபதி திருநாவுக்கரசு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பள்ளிக்கூட மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்ற குற்றத்துக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதுபோல் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். இந்த 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் இந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். அதன்படி குற்றவாளியான கோபால கிருஷ்ணன் 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். இதில் 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்திலும் 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஆயுள்தண்டனை காலத்துக்கு பிறகும் அனுபவிக்க வேண்டும் என்று மொத்தம் 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி திருநாவுக்கரசு அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்

நாகாலாந்தில் ஜெயில் கைதி அடித்துக்கொலை: நடந்தது கற்பழிப்பு அல்ல; சம்மதத்துடன் கூடிய உடலுறவு மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

புதுடெல்லி நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5–ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள் புகுந்து வெளியே இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், ‘சையது சரிப் கான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று ‘செக்ஸ்’ உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டதற்கு, தான் மறுத்ததால், கற்பழிப்பு புகார் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இது கற்பழிப்பு அல்ல, இருவரின் விருப்பத்துடன் நடந்த ‘செக்ஸ்’ உறவு என்று தோன்றுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

காரில் சென்ற இளம் பெண் கடத்தி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்

சண்டிகார், அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் ஹார்சோலா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கார் கண்ணாடி உடைக்கப் பட்டது. கார் நின்றதும், அந்த பெண்ணின் உறவினர்களை யும் அடித்து உதைத்தனர். அப்போது, திடீர் என்று காரில் இருந்த பெண்ணை 6 பேர் கொண்டகும்பல் இழுத்தச் சென்றது. பின்னர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்தனர். அந்த பெண் கதறி கூச்சலிட் டார். உடனே அந்த கும்பல், ’இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த தலித் பெண்ணை எச்சரித்து விட்டு ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை சட் டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலித் பெண்ணை கற் பழித்தவர்களில் கண்டீலா கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மனோஜ், ஜிதிந்ரா, காலா, சந்தீலா ஆகிய 5 பேர் அடையாளம் தெரிந் தது. மேலும் ஒருவரை யும் போலீசார் தேடி வரு கிறார்கள். மருத்துவ பரிசோதனை யில் அந்த பெண் கற்பழிக் கப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. குற்றவா ளிகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஜிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் ஜார்வால் தெரிவித்தார்
+