Tamil Latest news,

சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குறைந்த சேமிப்பு, நிறைந்த லாபம் தரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர பொதுமக்கள் ஆர்வம்

undefined
இந்திய அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு’ திட்டத்தில் சேர, தபால் அலுவலகத்தில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’

இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’ கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தால் பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை, அவர்களின் சிறுவயதிலிருந்தே பெற்றோர் அல்லது காப்பாளர்கள் சேமிப்புக்கு உறுதுணையாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது குழந்தைகளின் காப்பாளர்கள் ஒன்று அல்லது 2 குழந்தைகளின் பெயரில் 10 வயது வரை சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

இந்த ஆண்டு முதல் ஆண்டு என்பதால் சலுகை காலமாக மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி முதல் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் பெயரில், வரும் டிசம்பர் 1-ந்தேதி வரை கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்பு கணக்கை தபால் அலுவலகம் அல்லது வங்கிகளில் தொடங்கலாம்.

வருமான வரிவிலக்கு

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடாக ஆயிரம் ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 14 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

செலுத்தும் தொகைக்கு 80-சி யின் கீழ் வருமான வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. 2014-2015 நிதியாண்டில், இக்கணக்குகளின் வருடாந்திர வட்டி விகிதம் 9.1 சதவீதம் கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பெண் குழந்தைகளின் 18-ஆவது வயதிலிருந்து 50 சதவீதம் வைப்புத் தொகையினை உயர்கல்விக்காகவும், திருமணத்திற்காகவும், கணக்கிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின்னர் கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும், கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களில் கைகுழந்தைகளுடன் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

வங்கிகளிலும் இந்த திட்டங்கள் தொடங்கப்படுவதால், அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு தகவலை அனுப்பி உள்ளது. அதில், ‘‘இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது, அதன் மூலம் எவ்வளவு பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை தினசரி ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்,’’ என்றும் அறிவித்துள்ளது.
+