Tamil Latest news,

என்ன கொடுமை சார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன கொடுமை சார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நண்பர்களுடன் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்த வாலிபர் கைது

undefined
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில், 20 வயதான வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்தார். அவர் பெயர் ஷெரோஸ் கான். ராக்கெட் என்ற செல்லப்பெயரும் அவருக்கு உண்டு. நண்பர்களிடம் பந்தயம் கட்டி, லாகூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவர் நிர்வாணமாக வலம் வந்தார். அவருடைய நண்பர்கள் அவரவர் மோட்டார் சைக்கிள்களில் கூத்தும், கும்மாளமுமாக பின்தொடர்ந்தனர்.

இந்த வீடியோ காட்சி, டெலிவிஷன் சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இது நடந்து சில நாட்கள் ஆன நிலையில், லாகூரின் முக்கிய பகுதியில் ஷெரோஸ் கான் மீண்டும் நிர்வாணமாக வலம் வரப்போவதாக தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்தில் குவிந்தனர். குறிப்பிட்ட சாலையை எல்லா திசைகளிலும் அடைத்தனர்.

திட்டமிட்டபடி, ஷெரோஸ் கான், நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அதிக வேகத்தில் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், பொது இடத்தில் அநாகரிகமாக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை, ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களாக இருந்தபோதிலும், ஷெரோஸ் கான் இன்னும் போலீஸ் பிடியில்தான் உள்ளார்.

மனைவியை சூட்கேசில் அடைத்து வைத்து கடத்திய கணவன்

undefined
வார்சா,

போலந்து நாட்டில் சூட்கேசில் அடைத்து மனைவியை கடத்த முயன்ற கணவர் ரெயில் நிலையத்தில் சிக்கினார்.போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரெயில் நிலையத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க நபர் ராட்சத சூட்கேசை எடுத்து வந்தார். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.

உள்ளே 30 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் உயிருடன் இருந்தார். இதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன்& மனைவி என தெரிய வந்தது. கணவன் பிரான்சையும், பெண் ரஷியாவையும் சேர்ந்த வர்கள்.-இவர்கள் போலந்தில் இருந்து பெலாரஸ் சென்றனர். அவர்களில் மனைவிக்கு பாஸ்போர்ட் இல்லை. எனவே கணவர் தனது மனைவியை சூட்கேசில் அடைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது

undefined மேற்கு வங்காளத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் கங்கனாப்பூரில் இயேசு சபைக்கு சொந்தமான கான்வெட் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளிக்குள், முகமூடி அணிந்த 7, 8 பேர் திடீரென புகுந்தனர். முதலில், பள்ளிக்கூட காவலாளியை கட்டிப்போட்ட அவர்கள் பள்ளியின் முதல்வரின் அறையை நோக்கி சென்றனர். அப்போது, அங்கு பள்ளியின் 72 வயது மூத்த கன்னியாஸ்திரி உறங்கிக்கொண்டிருந்தார். பக்கத்து அறைக்கு தூக்கிச்சென்று அவரை அந்த கும்பல் கற்பழித்தது. பின்னர், பள்ளியின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம், மடிக்கணினி, செல்போன்கள், கேமராக்களை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கற்பழிப்பால் படுகாயமடைந்த கன்னியாஸ்திரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனை கொண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேர் அடங்கிய காட்சிகளையும் போலீசார் சி.சி.டி.வி. பதிவில் இருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் தொடர்பாக சரியான தகவலை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்து உள்ளது.

undefined

மேற்கு வங்காளத்தில், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் கங்கனாப்பூரில் இயேசு சபைக்கு சொந்தமான கான்வெட் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளிக்குள், முகமூடி அணிந்த 7, 8 பேர் திடீரென புகுந்தனர். முதலில், பள்ளிக்கூட காவலாளியை கட்டிப்போட்ட அவர்கள் பள்ளியின் முதல்வரின் அறையை நோக்கி சென்றனர். அப்போது, அங்கு பள்ளியின் 72 வயது மூத்த கன்னியாஸ்திரி உறங்கிக்கொண்டிருந்தார். பக்கத்து அறைக்கு தூக்கிச்சென்று அவரை அந்த கும்பல் கற்பழித்தது.

பின்னர், பள்ளியின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம், மடிக்கணினி, செல்போன்கள், கேமராக்களை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கற்பழிப்பால் படுகாயமடைந்த கன்னியாஸ்திரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அடுத்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனை கொண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குற்றவாளிகள் 4 பேர் அடங்கிய காட்சிகளையும் போலீசார் சி.சி.டி.வி. பதிவில் இருந்து பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் தொடர்பாக சரியான தகவலை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்து உள்ளது.

கம்ப்யூட்டர் விளையாட்டு ஏற்படுத்திய சோகம்

undefined
நாள்தோறும் புதிது புதிதாக அறிமுகமாகும் கம்ப்யூட்டர் கேம்கள் (கணினி விளையாட்டு), சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஈர்த்து விடுகிறது. அதிலும் பலர் இதற்கு அடிமையாகி எப்போதும் கம்ப்யூட்டரே கதி என கிடக்கிறார்கள். அது சில நேரத்தில் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்தவர் வு டாய். 24 வயது இளைஞரான இவர் கம்ப்யூட்டர் கேம் பிரியர். இதற்காக சமீபத்தில் ஒருநாள் அங்குள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு அவர் ‘வேர்ல்டு ஆப் வார்கிராப்ட்’ என்ற விளையாட்டை தொடர்ச்சியாக 19 மணி நேரம் விளையாடினார்.

அப்போது அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டது. தொடர்ந்து இருமியவாறே இருந்த அவர், திடீரென இருக்கையில் இருந்து கீழே சாய்ந்தார். அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் வு டாய் பரிதாபமாக இறந்து விட்டார். ஓய்வின்றி விளையாடியதால்தான் இந்த மரணம் ஏற்பட்டதாக போலீசார் கூறினர்

குடித்து விட்டு இளம் பெண் ரோட்டில் போலீசாருடன் ரகளை வீடியோ

undefined
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் இளம் பெண் ஸ்டிவாணி கடந்த சில நாட்களுக்கு ஜகர்தா நகரின் தென்பகுதியில் உள்ள ஜலன் அண்டாசாரி என்ற இடம் அருகே கார் ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் மது அருந்தி இருந்தார்.

அப்போது நிலை தடுமாறி ரோட்டு ஓரம் இருந்த் தடுப்பில் கார் மோதியது இதில் அவரது காரின் இரண்டு சக்கரங்களும் வெளியே வந்து விட்டன. தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது டிவி கேமரா மேன் ஒருவர் அதை படம் பிடித்து கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் கேமிராமேனுடன் தகராறு செய்து அவரை தாக்கினார். கேமிராமேனை பின் தொடர்ந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். காட்சிகளை படம் பிடிக்க கூடாது என வாதிட்டார்.

ஆனால் அவர் பத்திரிகையாளரை தாக்க முயன்றது அவர்களுடன் சண்டை போட்டதே சுவராஸ்யமான் காட்சிகளாக இருந்தது. அவர் குடித்து விட்டு இவ்வாறு நடந்ததால் ஆங்காங்கே விழுந்து எழுந்து வந்து சண்டை போட்டார். போலீசார் அவர் மீது குடித்து விட்டு கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் அவர் கைது செய்யும் போதும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்

வேலை பறிபோன கோபத்தில் குழந்தையின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிய பணிப்பெண்

ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு வீட்டில் கடந்த 4 வருடங்களாக இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு பெண் வேலை செய்து வந்தார். அந்த குடும்பத்தில் உள்ள 3 வயது குழந்தையை பராமறித்து வந்தார். அவருடைய 4 வருட விசா முடிவடைந்தது. விசாவை நீட்டித்து தருமாறு அந்த பெண் தெரிவித்து இருந்தார். ஆனால் விசா நீட்டித்து தரப்பட வில்லை.

இந்த நிலையில் 3 வயது சிறுவன் உமர் யூசுப் அலி வாபி  வீட்டு வெளியே விளையாடி கொண்டு இருந்தான் அப்போது பணிப்பேண் சிறுவனை முகத்தை சுத்த செய்வதாக கூறி கழிவறைக்குள் கொண்டு சென்று அங்கு இருந்த  கழிவறை ஆசிட்டை குழந்தையின் முகத்தில் ஊற்றினார். இதில் குழந்தையின் முகம் மற்றும் உடலின் பல பாகங்களிலும் ஆசிட் விழுந்து காயமானது.உடனடியாக குழந்தையை  ஷார்ஜாவில் உள்ள அல் குவசிமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உமரின் தத்து தாயார் அமினா கூறிய தகவலின் படி  உள்ளூர்  பத்திரிகையில் செய்தி பிரசுரமாகி உள்ளது.  இந்த சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது. ஆசிட் பட்டதும் குழந்தையின்  முகத்தில் இருந்து கரும் புகை வந்து உள்ளது.வீட்டில் உள்ளவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பணிப்பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் சிறுவன் தானே ஆசிட்டை எடுத்து முகத்தில் ஊற்று கொண்டதாக  முதலில் பணிப்பெண் கூறி உள்ளார். பின்னர் தனது குற்றத்தை ஒப்பு கொண்டார்.

குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது.சேதம் அதிகமாக உள்ளது பிளாஷ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனை  டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்
+