Tamil Latest news,

இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த ஆண்டில் 50–வது பிறந்த நாள் காணும் 3 ‘கான்’ நடிகர்கள் அமீர்கான் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்

undefined
மும்பை,
இந்த ஆண்டில் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் ஆகிய மூவரும் 50–வது பிறந்த நாள் காண்கிறார்கள்.
3 ‘கான்’ நட்சத்திரங்கள்இந்திப்பட உலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் நட்சத்திரங்கள் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான். இவர்கள் மூன்று பேருமே இந்த ஆண்டு 50–வது பிறந்த நாள் காண்கிறார்கள். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் 3 பேரில் மூத்தவர் அமீர்கான் தான். இவருக்கு இன்று (சனிக்கிழமை) 50 வயது பிறக்கிறது. அடுத்ததாக நவம்பர் 2–ந் தேதி ஷாருக்கானும், டிசம்பர் 27–ந் தேதி சல்மான்கானும் 50–வது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர்.
அமீர்கானுக்கு இன்று 50–வது பிறந்த நாள் என்றபோதிலும், நேற்றே பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது:–
20 வயது இளைஞன்நாங்கள் மூவரும் இந்த ஆண்டில் 50–வது வயதை அடைகிறோம். ஆனால் நாங்கள் 18 முதல் 20 வயதை கடக்கவில்லை. நான் என்னை இன்னமும் 20 வயதுக்கும் குறைந்த இளைஞராகவே கருதுகிறேன். எனது பணியை எப்போதும் இருதயத்தில் இருந்து செய்கிறேன். சிலருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். இதற்காக நான் நன்றி கடமைப்பட்டு உள்ளதாக கருதுகிறேன். இந்த தருணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தவறுகள் மற்றும் தோல்விகள் மூலம் நிறைய கற்று கொண்டேன். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை தோல்விகள் தான் என்னை சிந்திக்க வைத்தன.
இவ்வாறு நடிகர் அமீர்கான் கூறினார்.
உடல் எடையை அதிகரித்தார்அமீர்கானின் அடுத்த படம் டாங்கல். இந்த படத்துக்காக அவர் தனது உடல் எடையை 22 கிலோ அதிகரித்து உள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘எந்த வயதிலும் உடல் எடையை கூட்டி குறைப்பது என்பது கடினமான ஒன்று. ஆனால் ஒரு நடிகனாக நான் இதை மகிழ்கிறேன். கண்ணாடியில் எனது உருவத்தை பார்க்கும்போது, சில நேரம் நான் வினோதமாக இருப்பதாக உணர்கிறேன்.’’ என்றா

அலியாவின் அதிரடித் திட்டம்

undefined
கத்ரீனா, கரீனா போன்ற ராணிகள் அரசோச்சிக் கொண்டிருக்கும் இந்தி திரையுலகில் சத்தமின்றி முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் நாயகி, அலியா பட்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பக்கூடிய ஹீரோயின் ஆகியிருக்கிறார் அலியா. மற்றவர்களைவிட சம்பளம் குறைவாக வாங்கிக் கொண்டு நிறைவாக நடிப்பதே காரணம்.

‘ஸ்டூடண்ட் ஆப் த இயர்’ படத்தின் மூலம் திரைக்கும் வந்த அலியா, அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘டூ ஸ்டேட்ஸ்’, ‘ஹம்டி ஷர்மா இ துல்ஹனியா’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் கொடியேற்றினார். திரைப்படம் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் மின்னி வருகிறார்.

அலியாவுடன் சிறிது அளாவளாமா?

* சினிமா, விளம்பரம் இரண்டிலும் நடிக்கிறீர்கள்... எதை மிகவும் விரும்புகிறீர்கள்?

இரண்டுமே எனக்கு விருப்பம்தான். சினிமா புகழ் வேறு, விளம்பர புகழ் வேறு. விளம்பரம் நாட்டின் ஒவ்வொரு சாதாரண மனிதரையும் போய்ச் சேரக் கூடியது. சினிமாவை விரும்பிப் பார்க்கிறார்கள். விளம்பரத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பார்க்கிறார்கள். விளம்பரத்தில் வேலை குறைவு, சம்பளம் அதிகம்.

* இரண்டு படப்பிடிப்புக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுக்கும் மேக்–அப் வித்தியாசப்படும், உடைகள் வித்தியாசப்படும். சிலநேரம் சினிமாவை விட அதிகமான உடையலங்காரம் தேவைப்படலாம். சினிமா என்பது பெரிய யூனிட், விளம்பரத்தில் வசனம் குறைவு, ஆக்ஷன் அதிகம்.

* நல்ல விளம்பரம் எப்படி இருக்க வேண்டும்?

உண்மையானதாக இருக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தி விற்கக்கூடாது.

* தனிப்பட்ட முறையில் தங்களுக்குப் பிடித்த விளம்பரம் எது?

அழகுசாதனப் பொருள் ஒன்றுக்கான விளம்பரம். அதன் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது.

* அழகைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?


செயற்கையாக அழகை வரவழைத்துக் கொள்ளவும் முடியாது, காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. நல்ல மனம், உடல் ஆரோக்கியம், சத்தான உணவு, நல்ல எண்ணங்கள், மனமகிழ்ச்சி, மற்ற உயிர்களை நேசிப்பதால் கிடைக்கும் ஆன்ம நிறைவு இவையெல்லாம் இயற்கையான முறையில் நம் அழகை காப்பாற்றிக் கொள்ள உதவும். மனத் தூய்மையைப் பொறுத்தே முக அழகு மிளிரும். ஞானிகள் முகத்தில் தோன்றும் அழகுக்குப் பின் எந்த ஒப்பனையும் இருந்ததில்லையே!

* உங்களுக்கு யார் முன்னோடி?

என் அம்மாதான். நான் எப்போதும் என் அம்மா போலவே உடை அணிய விரும்புவேன். முறையாகப் பேசவும், சிரிக்கவும், வேலை செய்யவும், நியாயமாக கோபப்படவும் அம்மாவிடமிருந்தே கற்றுக் கொண்டேன். பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு அம்மாதானே ரோல்மாடல்?

* வருங்கால இளைஞர்களுக்கு என்ன தேவை?

நல்ல வழிகாட்டி தேவை. இளைஞர்களிடம் எதையும் சாதிக்கும் சக்தி இருக்கிறது. துணிவும் இருக்கிறது. துடிப்புமிக்க இளைஞர்கள் கூரிய கத்தி போல. எதையும் செய்யலாம். ஜாக்கிரதையாக அவர்களைக் கையாண்டு நல்லவற்றை மட்டுமே சாதிக்க வேண்டும். அதுவே நாட்டுக்குப் பெருமை.

*  எதிர்கால கனவு என்ன?

ஓர் ஆசிரமம் நிறுவவேண்டும் (இப்படி ஓர் அதிரடித் திட்டமா?). இன்று நாட்டில் பல இடங்களில் அமைதி சீர்குலைந்திருக்கிறது. எதையோ சாதிக்க ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அமைதியைத் தொலைத்து விடுகிறார்கள். அவர்களுக்கு அமைதியைத் தரும், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக எனது ஆசிரமம் அமைய வேண்டும்.

* உங்கள் மனதை உறுத்தும் விஷயம் என்ன?

முதியவர்களை உதாசீனப்படுத்துவது. இது பெரிய பாவம் என்பது இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். முதியோர்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்காக ஒரு முதியோர் இல்லமும் நிறுவ வேண்டும் என்பது என் ஆசை.

* சினிமாவில் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

என் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும்.

அலியா சொல்வது அழகு
+