Tamil Latest news,

விவசாயிகள் தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயிகள் தற்கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விவசாயிகள் தற்கொலை விவகாரம்: சட்டசபையில் மராட்டிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு


undefined மும்பை, விவசாயிகள் தற்கொலை விவகாரம் மற்றும் விவசாய விளை பயிர்கள் நாசம் ஆகிய பிரச்சினைகளை எழுப்பி சட்டசபையில் மராட்டிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கண்டனம் மராட்டிய சட்டசபையில் நேற்று ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினை மீதான விவாதத்தை பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சஞ்சய் குந்தே தொடங்கி வைத்தார். அப்போது பேசிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ‘‘விவசாயிகள் பெற்ற கடன் தொகையை மறுசீரமைப்பதை விட்டு விட்டு, அதை தள்ளுபடி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார். மேலும், ‘‘மின்கட்டணத்தை 29 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே கடன்சுமையால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் காயங்கள் மீது உப்பை தடவக்கூடாது’’ என்றார். விவசாயிகள் ஏமாந்துவிட்டனர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, விவசாயிகளின் தற்கொலைக்காக அரசின் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், தற்போது விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை கண்டு என்ன சொல்வார்? அவரது நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி கேட்டார். இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், தேவேந்திர பட்னாவிஸ் பிரதமருக்கு மிகவும் பிடித்தமானவர். எனவே, மாநிலத்துக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. விவசாயிகள் ஏமாந்துவிட்டனர் என்று கூறினார்
+