நண்பர்களுடன் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்த வாலிபர் கைது

undefined
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில், 20 வயதான வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக வலம் வந்தார். அவர் பெயர் ஷெரோஸ் கான். ராக்கெட் என்ற செல்லப்பெயரும் அவருக்கு உண்டு. நண்பர்களிடம் பந்தயம் கட்டி, லாகூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவர் நிர்வாணமாக வலம் வந்தார். அவருடைய நண்பர்கள் அவரவர் மோட்டார் சைக்கிள்களில் கூத்தும், கும்மாளமுமாக பின்தொடர்ந்தனர்.

இந்த வீடியோ காட்சி, டெலிவிஷன் சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இது நடந்து சில நாட்கள் ஆன நிலையில், லாகூரின் முக்கிய பகுதியில் ஷெரோஸ் கான் மீண்டும் நிர்வாணமாக வலம் வரப்போவதாக தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்தில் குவிந்தனர். குறிப்பிட்ட சாலையை எல்லா திசைகளிலும் அடைத்தனர்.

திட்டமிட்டபடி, ஷெரோஸ் கான், நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அதிக வேகத்தில் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், பொது இடத்தில் அநாகரிகமாக நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை, ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களாக இருந்தபோதிலும், ஷெரோஸ் கான் இன்னும் போலீஸ் பிடியில்தான் உள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

+