Tamil Latest news,

உஷாரய்யா உஷாரு... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உஷாரய்யா உஷாரு... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல்

சென்னை,
கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்சென்னை கொளத்தூர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 29), மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். ஆனால் ரெயில் சென்றுவிட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 5 மாத குழந்தை யாழினியை மர்ம பெண் ஒருவர் தூக்கிச் சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணின் உருவம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கடத்தல்காரியை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தெளிவாக இல்லைதனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள், குழந்தை கடத்தல் வழக்கில் ஏற்கனவே பிடிப்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் குழந்தையை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பழுதாகியிருந்ததால் கடத்தல்காரியின் முகம் தெளிவாக பதிவாகவில்லை. ரெயில் நிலையத்தில் பிற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமே குழந்தையை தூக்கிச்சென்ற பெண் அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் அவளது முகம் தெளிவாக இல்லை.
திருவான்மியூரில் யாழினி?திருவான்மியூர் பகுதியில் யாழினி தோற்றத்தில் ஒரு குழந்தை இருப்பதாக திருவான்மியூர் போலீசார் நேற்று ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார், ராஜாவுடன் அங்கு சென்று பார்த்தபோது அது யாழினி இல்லை என தெரிந்தது.
ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கண்காணிப்பு கேமராவில் பதிவான சுடிதார் அணிந்த அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அந்த பெண்ணின் உருவத்தை தெளிவான புகைப்படமாக மாற்ற ஸ்டூடியோவிற்கு அனுப்பியுள்ளோம். அந்த புகைப்படம் வந்த பின்னர் அதனை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அனுப்புவோம். 2 நாட்களில் குற்றவாளியை அடையாளம் காண்போம்’’ என்றார்.

உயர் போலீஸ் அதிகாரியின் ‘செக்ஸ்’ தொல்லை: உரையாடலை ‘செல்போனில்’ பதிவு செய்து பெண் போலீசார் வெளியிட்டனர் சென்னையில் பெரும் பரபரப்பு

undefined
பாலியல் தொல்லை தாங்க முடியாததால், உயர் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியதை செல்போனில் பதிவு செய்து, பெண் போலீசார் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால், சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான உரையாடல்

‘இந்திரன் கெட்டது பெண்ணால.... சந்திரன் கெட்டது பெண்ணால... நம்ம அண்ணன் கெட்டது எதனால’ என்று ஒரு திரைப்பட பாடல் உள்ளது. இந்த பாடலை தற்போது, சென்னையில் பணியாற்றி வரும் உயர் போலீஸ் அதிகாரியை பார்த்து, மற்றவர்கள் பாடத்தொடங்கியுள்ளனர்.

அதற்கு காரணம், உளவுப்பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஐகோர்ட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடந்த 2 நாட்களாக ‘வாட்ஸ் அப்பில்’ ஒரு பரபரப்பான ‘ஆடியோ பைல்’ உலாவிக்கொண்டிருக்கிறது.

அதாவது, பெண் போலீசின் அழகை வர்ணித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் உரையாடல்தான் அது. அந்த பெண்ணின் அழகில் மயங்கி அந்த ‘மன்மதராசா’ போலீஸ் அதிகாரி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், அதற்கு அந்த பெண் போலீஸ் பயந்து பயந்து பதில் சொல்லுவதுமாக உள்ளது.

அந்த உரையாடல் மூலம் அந்த பெண் போலீசுக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது.

பாலியல் தொல்லை

அந்த உரையாடலின்போது, அந்த பெண் போலீஸ் அருகில், யாரோ சிலர் நின்றுகொண்டு சொல்லிக் கொடுப்பது தெரிகிறது. அவர்கள் மெல்ல பேசுவதுகூட கேட்க முடிகிறது. இந்த உரையாடல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்குள் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பெண் போலீசை, அந்த உயர் அதிகாரி கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதை தாங்க முடியாமல், பெண் போலீசார் சிலர் கும்பலாக சேர்ந்து, அந்த அதிகாரி பேசியதை பதிவு செய்து, ‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டுள்ளதாகவும், இதுகுறித்து டி.ஜி.பி., போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு அதிகாரி

இதுபோல, ஏழுகிணறு காவல் நிலையத்தில் உள்ள ஒரு அதிகாரி பற்றிய ஆதாரமும் தயாராக வைத்திருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் கேட்டால் தர தயாராக இருப்பதாகவும் ஒரு பெண் போலீசின் கணவர் எழுதியது போன்ற ஒரு கடிதமும் உலா வந்துகொண்டிருக்கிறது

உஷாரய்யா உஷாரு...

undefined
கிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உடல்  நலக்குறைவு காரணமாக சற்றுச் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. அப்போது, ஆர்ப்பாட்டத்தோடு வாகனத்தில் வந்து இறங்கினர் சிலர். ‘அபாரமாய் வெளுக்கும் சலவை சோப்பை அஞ்சே ரூபாய்க்குத் தருகிறோம். வாங்கிக்கங்க... வாங்கிக்கங்க...’ என்று கூவினார்கள். 

கூடவே, குஷியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார்கள். ‘ஒவ்வொரு சோப்புடனும் ஒரு கூப்பன் தருவோம். அதை சுரண்டிப் பார்த்தால், டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கக்  கூடும். உங்களுக்கு வேண்டிய பரிசை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்’ என்று முழங்கினார்கள். திண்ணைப் பெண்மணியிடமும், ‘அஞ்சு ரூபாய்தானேக்கா... வாங்கிக்கங்க. உங்களுக்குப் பரிசும் கிடைக்கலாமே?’ என்று அன்புக் கோரிக்கை விடுத்தார்கள். 

சரி, போனால் போகுது என்று ஐந்து ரூபாய்க்கு ஒரு சோப்பை வாங்கினார் அவர். அவருக்கு கொடுத்த டோக்கனை சுரண்டிப் பார்க்க, அதில் ‘முதல் பரிசு’ என்றிருந்தது. அப்பெண்மணிக்குத் தலைகால் புரியவில்லை. உடல்நலக்குறைவுகூட ஓடி மறைந்துவிட்டது போன்ற உணர்வு. தனக்கு டி.வி. வாங்கிக்கொள்வதா அல்லது பிரிட்ஜ் அல்லது வாஷிங்மெஷினை தேர்வு செய்வதா என்று இனிய குழப்பத்தில் மூழ்கினார் அவர். அதற்குள் விஷயம் கிராமமெங்கும் தீயாய் பரவிவிட்டது. பாய்ந்து வந்து சோப்புகளை அள்ளத் தொடங்கினார்கள்.  திண்ணை அக்காவுக்கோ தனக்கு எப்போது பரிசு கொடுப்பார்கள் என்ற பதற்றம். சோப்புக்காரர்களிடம் மெதுவாய் அவர் கேள்வியைப் போட, ‘வாங்கக்கா... வீட்டுக்குள்ளே போய் பேசுவோம்’ என்று அழைத்தது அந்த ‘டீம்’. ‘சரி, வீட்டுக்குள் வைத்துத்தான் பரிசைக் கொடுப்பார்கள் போல’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் போனதும், தட்டு, பூரி தேய்க்கும் கட்டை, கரண்டி, லொட்டு லொசுக்கு என்று சில பொருட்களைக் கடைபரப்பினார்கள். 

பார்வையிலேயே அவை படு மலிவானவை என்பது தெரிந்தது.  ‘மூவாயிரம் மதிப்புள்ள இந்தப் பொருட்களை ‘கம்பெனி’ உங்களுக்கு வெறும் 1500 ரூபாய்க்குத் தருது... வாங்கிக்கங்க’ என்றார்கள். பெண்மணிக்கு எரிச்சல். ‘அது சரி, நீங்க பரிசா தருவதா சொன்ன பொருள் எங்கே?’ என்றார் அவசரமாய். ‘நீங்க இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிக் கொண்டால், நாங்கள் ஊருக்குச் சென்று அனுப்பிவைப்போம்’ என்று காதில் சூட்டுவதற்கு சரம் சரமாய் மாலை தொடுத்தார்கள். 

பெண்மணி கோபமாகிவிட்டார், ‘எனக்கு எந்தப் பொருளும் வேணாம், நீங்க போயிட்டு வாங்க’ என்று ஐந்து ரூபாயோடு போகட்டும் என்று அவர்களை வெளியே துரத்தினார். அவர்களிடம் சோப்பு வாங்கிய மக்கள் கும்பல் தங்களுக்கு எப்போது பரிசு கிடைக்கும் என்று சூழ்ந்து நச்சரிக்க, ‘விரைவில் வெள்ளித் திரையில் காணுங்கள்’ என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, ‘சோப்பு’ போடுவதற்கு அடுத்த ஊருக்கு வேனை கிளப்பிவிட்டார்கள். சோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜாக்கிரதை!
+