2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மரணம்


கொல்கத்தாவில் 2012-ம் ஆண்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழந்தார். மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி, பெண் ஒருவர் ஓடும் காரில் கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவுபெண் பப்பில் இருந்து வெளியே வந்தபோது, 6 வாலிபர்களால் காரில் அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்தி வெளியுலகிற்கு தெரியவந்தவர். பல்வேறு போராட்டங்கள் நடத்திய பெண் இன்று காலை உயிரிழந்தார். உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சிலநாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்ணின் உடல்நலம் பாதிப்பு தொடர்பான முழுவிபரங்கள் வெளியாகவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

0 comments:

கருத்துரையிடுக

+