நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது
கோழிகோடு,
கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து உள்ளார்.
கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஷமீர்(வயது 29) தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதனை பேஸ்புக்கில் பார்த்த அவருடைய முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சுற்றிவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவுசெய்து வாலிபரை கைது செய்தனர்
0 comments:
கருத்துரையிடுக