காரில் சென்ற இளம் பெண் கடத்தி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்

சண்டிகார், அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் ஹார்சோலா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கார் கண்ணாடி உடைக்கப் பட்டது. கார் நின்றதும், அந்த பெண்ணின் உறவினர்களை யும் அடித்து உதைத்தனர். அப்போது, திடீர் என்று காரில் இருந்த பெண்ணை 6 பேர் கொண்டகும்பல் இழுத்தச் சென்றது. பின்னர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்தனர். அந்த பெண் கதறி கூச்சலிட் டார். உடனே அந்த கும்பல், ’இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த தலித் பெண்ணை எச்சரித்து விட்டு ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை சட் டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலித் பெண்ணை கற் பழித்தவர்களில் கண்டீலா கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மனோஜ், ஜிதிந்ரா, காலா, சந்தீலா ஆகிய 5 பேர் அடையாளம் தெரிந் தது. மேலும் ஒருவரை யும் போலீசார் தேடி வரு கிறார்கள். மருத்துவ பரிசோதனை யில் அந்த பெண் கற்பழிக் கப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. குற்றவா ளிகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஜிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் ஜார்வால் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக

+