கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு

நாள்:ஞாயிறு, மார்ச் 08,2015, 4:00 AM ISTபதிவு செய்த நாள்:சனி, மார்ச் 07,2015, 8:32 PM IST ஈரோடு, பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மாணவி பலாத்காரம் ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 29). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் கடந்த 11–8–2013 அன்று அந்த பகுதியில் 9–ம் வகுப்பு படித்துவந்த பள்ளிக்கூட மாணவி ஒருவரை ஏமாற்றி ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 21 ஆண்டு ஜெயில் வழக்கை நீதிபதி திருநாவுக்கரசு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பள்ளிக்கூட மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்ற குற்றத்துக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதுபோல் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். இந்த 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் இந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். அதன்படி குற்றவாளியான கோபால கிருஷ்ணன் 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். இதில் 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்திலும் 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஆயுள்தண்டனை காலத்துக்கு பிறகும் அனுபவிக்க வேண்டும் என்று மொத்தம் 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி திருநாவுக்கரசு அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்

0 comments:

கருத்துரையிடுக

+