நாகாலாந்தில் ஜெயில் கைதி அடித்துக்கொலை: நடந்தது கற்பழிப்பு அல்ல; சம்மதத்துடன் கூடிய உடலுறவு மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

புதுடெல்லி நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5–ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள் புகுந்து வெளியே இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், ‘சையது சரிப் கான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று ‘செக்ஸ்’ உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டதற்கு, தான் மறுத்ததால், கற்பழிப்பு புகார் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இது கற்பழிப்பு அல்ல, இருவரின் விருப்பத்துடன் நடந்த ‘செக்ஸ்’ உறவு என்று தோன்றுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

+