மும்பையில் சொத்துகள் வாங்கதுபாய் வாழ் இந்தியர்கள் ஆர்வம்

undefined

துபாய் ;ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், மும்பையில் சொத்துகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இது குறித்து, சுமன்சா எக்சிபிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம் வருமாறு:இந்திய ரியல் எஸ்டேட் துறையில், துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட, ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.அவர்கள், தனி வீடு, வில்லா, அடுக்கு மாடி குடியிருப்பு போன்றவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் சொத்து முதலீட்டிற்கான தேர்வில், மும்பை நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 14,700 பேரில், மும்பையில் முதலீடு செய்ய, 31.86 சதவீதத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இத்தகைய ஆய்வில், தொடர்ந்து, மும்பை நகரம், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் விருப்பமான முதலீட்டு மையமாக திகழ்கிறது.அடுத்ததாக, 24.35 சதவீதம் பேர், பெங்களூரில் சொத்துகளை வாங்க விரும்புகின்றனர். இந்த பட்டியலில், மூன்றாவது இடத்தை, சென்னை மற்றும் புனே நகரங்கள் பிடித்துள்ளன. அடுத்த இடங்களில், டில்லி, கொச்சி, நவிமும்பை, கூர்கான், ஐதராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த ஆய்வில், 76 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சொத்துகளை வாங்க, 36 சதவீதத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 52 சதவீதம் பேர், 25 – 75 லட்சம் ரூபாய் வரை, சொத்துகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளை வாங்க, 16 சதவீதம் பேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

+