கூடு­த­லாக 1.30 கோடி வீடுகள் தேவை

புது­டில்லி:வரும், 2018ம் ஆண்­டிற்குள், நகர்ப்­பு­றங்­களில், கூடு­த­லாக, 1.30 கோடி வீடுகள் தேவைப்­படும். இதில், நான்கில் ஒரு பகுதி, முக்­கிய எட்டு நக­ரங்­களில் தேவைப்­படும் என, சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, குஷ்மன் வேக்­பீல்டு தெரி­வித்­துள்­ளது.வீட்­டு­வ­சதி மற்றும் நகர்ப்­புற வறுமை ஒழிப்பு அமைச்­ச­கத்தின், 2012ம் ஆண்டின் மதிப்­பீட்­டின்­படி, நாடு­மு­ழு­வ­திலும், வீடு­க­ளுக்­கான பற்­றாக்­குறை, 1.88 கோடி என்ற அளவில் உள்­ளது.இந்­நி­லையில், நகர்ப்­பு­றங்­களில் மக்கள் தொகை பெருகி வரு­வ­தை­ய­டுத்து, வரும், 2018ம் ஆண்­டிற்குள், புதிய வீடு­க­ளுக்­கான தேவை, 1.30 கோடி­யாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதில், மும்பை, கோல்­கட்டா, சென்னை உள்­ளிட்ட முக்­கிய எட்டு நக­ரங்­களில் மட்டும், 29.50 லட்சம் வீடுகள் (23 சத­வீத பங்­க­ளிப்பு) தேவைப்­படும் என, குஷ்மன் வேக்­பீல்டு மேலும் தெரி­வித்­துள்­ளது

0 comments:

கருத்துரையிடுக

+