புதுடில்லி: பார்லிமென்டில், காப்பீடு மசோதா நிவேற்றப்பட்டுள்ளதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பாராட்டும், வரேற்பும் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, உடனடியாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு வர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு, தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பார்தி - ஆக்ஸா லைப் இன்சூரன் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: பார்தி நிறுவனமும், பிரான்ஸ் நாட்டின் ஆக்ஸா நிறுவனமும் இணைந்து, பார்தி - ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த, 2006 முதல் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், பார்தி, ஆக்ஸா நிறுவனங்கள், 74:26 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளன.
பார்லிமென்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, காப்பீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனி, ஆக்ஸா நிறுவனம், தன் முதலீட்டை, 49 சதவீதமாக அதிகரிக்கும். இதன் மூலம், உடனடியாக பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் முதலீடு குவியும். இவ்வாறு அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, ஐ.சி.ஐ.சி.ஐ., நிறுவனத் தலைவர், சந்தா கோச்சார், எஸ்.பி.ஐ., நிறுவனத் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா, 'ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ்' நிறுவனத்தலைவர் ஜெகன்னாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இன்சூரன்ஸ் துறையில், நேரடி அன்னிய மூதலீட்டை, 49 சதவீதமாக அதிகரித்துள்ளதின் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாக இந்தியாவில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதாவால், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரிப்பதோடு, அதிப்படியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்சூரன்ஸ் துறையில் ஏற்படும் மாற்றத்தால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் உருவாகும் என, மத்திய நிதித்துறை இணையமைச்சர், ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக