இந்தியாவில் சிறுபான்மையினர் யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ்

undefined
நாக்பூர், 

இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது, அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கூட்டம் 

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபாவின் (ஏ.பி.பி.எஸ்) மூன்று நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து 1,600–க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைவரும் இந்துக்களே 

இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாருமே கிடையாது. இங்கு கலாசார அடிப்படையிலும், தேசிய ரீதியிலும், டி.என்.ஏ. அடிப்படையிலும் அனைவரும் இந்துக்களே. நாங்கள் யாரையும் சிறுபான்மையினராக கருதவில்லை. இந்தியாவில் சிறுபான்மை கருத்து இருக்கக்கூடாது.இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்று மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) 20 தடவை சொல்லி இருக்கிறார். இதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, ஆனால் கலாசார, தேசிய மற்றும் டி.என்.ஏ. அடிப்படையில் அனைவரும் சமமானவர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:–

நிலம் கையகப்படுத்தும் மசோதா 

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தபின்னர், அந்த மசோதா மோசமானதாக இல்லை.ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் ஷரத்து 370 மீதான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சரியானது தான் என்று நாங்கள் கருதவில்லை. இதற்காக அரசு தவறிவிட்டது என்ற முடிவுக்கும் நாம் வந்துவிட முடியாது. இது ஒரு நூதனமான சோதனை. இந்த சோதனை வெற்றிபெற நேரமும், வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

கூட்டணி தர்மம் 

மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். முழு ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். இரு கட்சிகளும் வேறுபாடுகளை களைந்து நல்லாட்சிக்கான செயற்பாட்டை உருவாக்க வேண்டும்.இவ்வாறு தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்

0 comments:

கருத்துரையிடுக

+