பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,
POst YOur Ad 100% Free
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் கூடிய கரசேவகர்களால், பாபர் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் உள்ளிட்ட பலர் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக சதிதிட்டம் குற்றச்சாட்டு தொடர்பாக ஹாஜி மெஹ்பூப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இன்று மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதுதொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அபிடவிட்டுடன் வருவதற்கு கூடுதல் காலஅவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

+