உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. 2-வது கட்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் முழு உறுப்பினர் விபரத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post Your Ad 100 % Free
கடந்த வருடம் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சியினை வலுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதிலிருந்து கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கைக்கு நவீன தொழில்நுட்ப முறை மற்றும் ஆன்-லைனும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்லவரவேற்பு கிடைத்து உள்ளது. மொபைல் வாயிலாக மிஸ்டுகால் கொடுத்தவுடன், பதிவுஎண் அனுப்பி வைத்து உறுப்பினர் விண்ணப்பம் வழங்கி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியே இதுவரையில் 8 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அதனை தற்போது பாரதீய ஜனதா முறியடித்து உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளது

0 comments:

கருத்துரையிடுக

+