அஜித்திடம் இருந்து அனைத்து நடிகர்களும் பணிவை கற்றுக்கொள்ள வேண்டும்-­வித்யூ ராமன்.


தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகைகளில் ஒருவர் வித்யூலேகா. இவர் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நீ தானே என் பொன்வசந்தம், வீரம், ஜில்லா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகையாக கலக்கியவர் வித்யூலேகா ராமன்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்னை அறிந்தால் படத்திற்கு நான் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தேன், அவர் இன்று எனக்கு “வேலைப்பளு காரணமாக என்னை பார்க்க முடியவில்லை, தகவலை தாமதமாக உங்களுக்கு அனுப்பியதற்கு மன்னியுங்கள்”’ என்று அஜித் கூறியதாக டுவிட் செய்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் மேலும் ‘அவரிடம் இருந்து அனைத்து நடிகர்களும் இந்த பணிவை கற்றுக்கொள்ள வேண்டும், இதனால், தான் இவர் இந்த உயரத்தில் இருக்கிறார்’ என டுவிட் செய்துள்ளார்.

இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் வித்யூலேகா பகிர்ந்துள்ளார். தல மேஸேஜுடன் எழுந்தேன். நான் என்னை அறிந்தால் படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார்.என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக

+