இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் ’ஜெய் ஹோ’ஆவணப்பட டிரைலர் வெளியீடு


undefined ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை மற்றும் இசை குறித்த ’ஜெய் ஹோ’ ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 60 நிமிட ஆவணப்படமாக உருவாகிறது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் பணி புரிந்த இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா உள்பட பலரது பேட்டிகள் இதில் இடம் பெற்று உள்ளது .இந்த ஆவண படத்தின் இரண்டரை நிமிடம் டிரைலர் வெளியிடபட்டது. ’ஜெய் ஹோ’ ஆவண படத்தை சிறந்த ஆவணப்பட தயாரிப்பாளர் உமேஷ் அகர்வால் இயக்குகிறார். இந்த ஆவணப்படம் நியூயார்க்கில் திரையிடபட்டது. இதில் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு இதழ் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர் இதில் இயக்குனர் உமேசும் , ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டனர்.இந்த ஆவணபடம் பார்வைளர்களின் வரவேற்பை பெற்றது. ஆவணபடத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஸ்டைல் ஆப் மியூசிக்,வாழ்க்கை, குடும்பம், நெருங்கிய நண்பர்கள், மற்றும் அவருடன் பணியாற்றுபவர்கள், குறிப்பாக லணடனில் உள்ளவர்கள்,லாஸ் ஏஞ்சல்ஸ்,மும்பை,சென்னையில் சூட் செய்யபட்டு உள்ளது. விளம்பர திரைப்பட இயக்குனரும், புகழ் பெற்ற இசையமைப்பாளருமான ஆண்ட்ரூ லாய்ட் வெபர் கூறும்போது, அவரை போன்ற வேறு எந்த இசையமைப்பாளரையும் நான் அறிந்ததில்லை. அவரது பாடல்களில் ஒன்றை நீங்கள் எப்பொழுதும் கூற முடியும் என கூறியுள்ளார். பட இயக்குனரான மணிரத்னம் கூறும்போது, ’மெட்ராசின் மொசார்ட்’ உடன் பணியாற்றுவது என்பது சுலபமானதல்ல என கூறியுள்ளார். மற்றொரு இயக்குநரான சேகர் கபூர் கூறுகையில், மேற்கத்திய இசையில் இருந்து இந்திய இசைக்கு வருவது போல் வந்து பின் மேற்கத்திய கிளாசிக் இசைக்கு செல்வது போன்ற இசை நடை அவருக்கு உள்ளதாக கூறியுள்ளார். ஜெய் ஹோவின் இயக்குநரான உமேஷ் அகர்வால், இந்தியாவில் பணத்திற்காக செய்தி வெளியிடுவதை மையமாக கொண்டு உருவான, புரோகனிங் நியூஸ் - மீடியா, மணி (பணம்) மற்றும் மிடில்மென் (இடை தரகர்) என்ற டாக்குமெண்ட்ரி (ஆவண படம்) ஒன்றை இயக்கியதற்காக புகழ் பெற்றவர். ஜெய் ஹோ ஆனது, ’ஜெய் கோ’ ஆவண படத்தை பொது சேவை ஒளிபரப்பு டிரஸ்ட் (PSBT) மற்றும் வெளிவிவகார அமைஅச்சகம் பொது தூதரக பிரிவு தயாரித்து உள்ளது.இந்தியாவில் இந்த ஆவணப்படம் ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லியில் திரையிடப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

+