புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம்

undefined
மெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பு சார்பில் சுமார் பத்து லட்சம் பேரின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. இதில் புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அமெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் அறுபது லட்சம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால் வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த மதிப்பீடு ஆகும். புகையிலையால் புதிதாக 5 நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேகப்ஸ் கூறியதாவது:-

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம்.

இங்கிலாந்து மருத்துவ ஆய்வில் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர இந்த பழக்கம் காரணமாக புதிதாக ஐந்து வகை நோய்கள் தாக்கி பலர் இறந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய்கள் ஆய்வின் போது கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் தனிக் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். இதில் புகைப்பழக்கத்தால் ரத்த நாளம் சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகள் இரு மடங்காக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

குடலுக்கு சரியாக ரத்த ஓட்டம் ஏற்படாதநிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக

+