சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நடை பயணம்

undefined
நமது நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டேக்) சார்பில் சென்னை ஐகோர்ட்டு இயங்கி வரும் பாரம்பரிய கட்டிட வளாகத்தின் உள்ளே நேற்று ‘பாரம்பரிய நடை’ பயணம் நடைபெற்றது. இந்த பாரம்பரிய பயணத்தில் மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு பெண் ஒருவர் பங்கேற்றார்.

அவர்களுக்கு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றின் பாரம்பரியம், வரலாறு மற்றும் கட்டிட கலைக்கு சான்றாக உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளையின் சென்னை ஒருங்கிணைப்பாளர் சுஜாதா சங்கர், பாரம்பரிய கமிட்டியை சேர்ந்த ராஜா ஆகியோர் எடுத்துக்கூறினார்கள்.

இதுகுறித்து சுஜாதா சங்கர் கூறுகையில், “நமது நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பாரம்பரிய கட்டிடங்களைப்போல இப்போது கட்டுவதற்கு கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பருவத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் மற்றும் கலை நயத்துடன் கட்டுவதற்கு என்ஜினீயர்கள் இல்லை. ஆகவே கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இந்த பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து, வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ள செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பாரம்பரிய நடை பயணத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறோம்.”

0 comments:

கருத்துரையிடுக

+