காணாமல் போன மலேசிய விமானம்: கடலுக்கு அடியில் தேடும்பணி தொடக்கம்

காணாமல் போன மலேசிய விமானம்: கடலுக்கு அடியில் தேடும்பணி தொடக்கம்
 
பதிவு செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:20 AM
மாற்றம் செய்த நாள் - ஏப்ரல் 05, 2014, 11:39:56 AM
காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியுள்ளது. விமான கருப்புப் பெட்டியின் பேட்டரி சில தினங்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல்களை கண்டறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. விமானம் காணாமல் போய் ஒரு மாத காலத்தை நெருங்கும் நிலையில், பேட்டரி செயலிழப்பதற்கு முன்னர் கருப்புப் பெட்டியை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும். சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தொலைவில் பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் இணைந்து விமானத்தின் பாகங்களை தேடி வருகின்றன. கடந்த மாதம் 8ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் எம்.எச்.370 விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே காணாமல் போனது.

0 comments:

கருத்துரையிடுக

+