படப்பிடிப்பில் இருந்து மாயமான நடிகை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார்

undefined
மலை உச்சியில் நின்று நடிக்க பயந்து, ஒரு நடிகை படப்பிடிப்பில் இருந்து திடீர் என்று மாயமாகி விட்டார். சொல்லாமல் கொள்ளாமல் அவர் சொந்த ஊருக்கு ஓடிப்போய் விட்டார்.

மலை உச்சியில்...

4 புதுமுக கதாநாயகர்கள், 4 புதுமுக கதாநாயகிகள் இணைந்து நடிக்க, கேசவன் டைரக்ஷனில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. இதில், பூவரசன் என்ற புதுமுக கதாநாயகனுக்கு ஜோடியாக டெல்லியை சேர்ந்த அனுபமா பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தனிமை துயரில் வருந்துகிற கதாநாயகன் பூவரசனுக்கு கதாநாயகி அனுபமா பிரகாஷ் ஆறுதல் சொல்வது போல் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். பாடல் காட்சியை கொடைக்கானலில் உள்ள தின்னவரை என்ற மலை உச்சியில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.

காய்ச்சல்

உயரமான பாறைகளின் மீது அனுபமா பிரகாசை நிற்க வைத்து படமாக்கினார்கள். அனுபமா பிரகாஷ் பயந்து கொண்டே பாறைகளின் மீது நின்றபடி நடித்துக்கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் நனைந்ததால், அனுபமா பிரகாசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவசரம் அவசரமாக படமாக்கிவிட்டு, அவரை ஓட்டலுக்கு அனுப்பிவைத்தார்கள். மறுநாள் காலை அவரை படப்பிடிப்புக்காக தேடியபோது, காணவில்லை. அவருடைய செல்போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

திடீர் மாயம்

படப்பிடிப்பு குழுவினர் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவர் திடீர் மாயமாகி விட்டார். விசாரித்ததில், அவர் சொந்த ஊரான டெல்லிக்கு சென்ற விவரம் தெரியவந்தது. கதாநாயகி இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

உடனடியாக தயாரிப்பாளர் கதிரவன் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அனுபமா பிரகாசை சந்தித்து பேசினார். அப்போது, இவ்வளவு உயரமான மலை உச்சியில் நின்று நடிக்க வேண்டும் என்பதை தன்னிடம் முன்பே சொல்லவில்லை என்று அனுபமா பிரகாஷ் வருத்தப்பட்டார்.

அவரை தயாரிப்பாளர் கதிரவன் சமாதானப்படுத்தி, மீண்டும் கொடைக்கானலுக்கு அழைத்து வந்து நடிக்க வைத்தார். இந்த முறை அவரை மலை உச்சியில் நிற்க வைக்காமல், காட்சிகளை மாற்றி படமாக்கினார்கள்

0 comments:

கருத்துரையிடுக

+